விவேகானந்தா கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூர் பகுதியில் தற்போது விவேகானந்தா கல்லூரியிலும் மற்றும் இராணி மேரி கல்லூரியிலும் இந்த ஆண்டிற்கான இளநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைதொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விவரங்களும் ஆன்லைனிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா ஆடவர் கல்லூரியில் தற்போது விடுதி வசதி இல்லை. காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விவேகானந்தா கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் முகவரி : https://rkmvc.ac.in/

இராணி மேரி கல்லூரி: http://www.queenmaryscollege.edu.in/