மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு இந்த இரவு நேர ரோந்து பணிக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துப்பணியின் முக்கிய நோக்கம் என்னவெனில் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கண்டுபிடிப்பது, திருட்டு சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவையாகும்.

மயிலாப்பூர் பகுதியில் காவல்துறை அதிகாரி விஜயலட்சுமி, இரவு 11 மணி முதல் 6 மணிவரை இரவு ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். இவரது தொலைபேசி எண் : 9498174421.
மேலும் காவல் உதவி ஆணையர் நடராஜன் இரவு நேர போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளை கையாள உள்ளார் இவரது தொலைபேசி எண் : 9444050423. இவர்கள் தவிர்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சன் இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளார் தொலைபேசி எண் : 9444755485 . பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால் மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

Verified by ExactMetrics