லஸ் அருகே அதிமுக கழக உறுப்பினர்கள் போராட்டம்

மயிலாப்பூர் அதிமுக கழக உறுப்பினர்கள் புதன்கிழமை பன்னிரெண்டு மணியளவில் லஸ் அருகே திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை குறிப்பிடும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை அனைவரும் கையில் ஏந்தியிருந்தனர். இந்த போராட்டம் சுமார் இருபது நிமிடம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.