வன்னியம்பதி பகுதியில் ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த வன்னியம்பதி பகுதி, மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலை அருகே உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தற்போது மூன்று பிளாக்குகள் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிளாக் 1 – ல் 111 தொகுதிகளும், பிளாக் 2 – ல் 1, 192 தொகுதிகளும் பிளாக் 3 ல் 192 தொகுதிகளும் கட்டப்படவிருக்கிறது.

இங்கு வசித்த மக்கள் இருப்பிடத்தை காலி செய்வதற்கு முன்னர் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இது தவிர இந்த பகுதியில் அனுமதியில்லாமல் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்த மக்களுக்கும் வீடுகளை வழங்கவுள்ளதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics