சென்னை மாநகராட்சியின் சேமிப்பு கிடங்கான விளையாட்டு மைதானம்.

மந்தைவெளி தெற்கு கெனால் பாங்க் சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தினமும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வியாட்டுக்களை விளையாடி வருகின்றனர். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பொருட்களை வைக்கும் சேமிப்பு கிடங்கு மாதிரி பயன்படுத்தி வருகின்றனர். மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை சென்னை மாநகராட்சி ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை. மேலும் அவர்கள் விளையாட்டுகளை விளையாடும் மைதானத்தில் இது போன்று பொருட்களை போட்டு வைத்தால் எப்படி விளையாடுவது என்று கேள்வி எழுப்புகின்றனர்.