ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பு அருகே உள்ள சி.பி. இராமசாமி பவுண்டேஷன் வளாகத்தில் உள்ள குரோவ் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை மாலை பள்ளி மூடப்பட்டது. மயிலாப்பூரில் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக குரோவ் பள்ளியில் பயின்ற மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சானிடைசர் செய்யப்பட்டு இந்த பள்ளி மூடப்பட்டது.

Verified by ExactMetrics