அரசின் விதிமுறைகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

லஸ் சந்திப்பு அருகே உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் வழக்கமாக சதுர்த்தி விழா நேரத்தில் ஒரு வார காலத்திற்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் மாலையில் கச்சேரிகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோயிலுக்குள்ளேயே அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும் என்றும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் நடைபெறும் கச்சேரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics