செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி நடைபெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தலும் நடைபெறும். இந்த வருடம் இந்த பழைய மாணவர்கள் சந்திப்பு கொரோனா காரணமாக ஜனவரி 26ம் தேதி காலை 11மணி முதல் ஆன்லைனில் கூகுள் மீட் வழியாக நடைபெறவுள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் மீட்டிங் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மீட் லிங்க்: meet.google.com/ tuq-gbnp-naz