தெற்கு மாட வீதியில் வியாபாரிகளை அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்.

இன்று சனிக்கிழமை காலை நடைபாதைகளில் காய்கறி வியாபாரிகளை அகற்றுவதற்காக, உள்ளூர் காவல்துறையினருடன், மாநகராட்சி பணியாளர்கள் தெற்கு மாடவீதிக்கு திரும்பினர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தை நடத்துவதற்கு ஆயத்தமாக மாட வீதிகளில் நடைபாதை வியாபாரிகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் உள்ளது.

இதுபோன்ற இரண்டாவது இயக்கம் இதுவாகும்.

இருந்தாலும் வியாபாரிகள் விடுவதில்லை; ‘டிரைவ்’ முடிந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புகிறார்கள்.

Verified by ExactMetrics