G20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் பிஸினஸ் சந்திப்புக்குப் பிறகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

இந்தியாவின் G20 தலைமையின் கீழ் இரண்டாவது G20 கட்டமைப்பு பணிக்குழு (FWG) கூட்டம் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் விருந்தினர்கள் தவிர G20 உறுப்பு நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜி 20 மாநாட்டின் பிரதிநிதிகள் சிலர் சனிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு, வழிகாட்டியுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒரு தொழில்முறை வழிகாட்டி இந்த விருந்தினர்களுக்கு கோயிலின் அம்சங்களையும் அதன் கட்டிடக்கலையையும் விளக்கி கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ஆர்.ஹரிஹரன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டு வருகையின் முடிவில் விருந்தினர்களுக்கு பட்டு சால்வை அணிவித்தனர்.

இவர்கள் வருகையை முன்னிட்டு இந்த பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.

G20 FWG உலகளாவிய மேக்ரோ பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

Verified by ExactMetrics