தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு

ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான கட்டண திட்டங்கள் உள்ளது.

நடைபயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் பூங்கா அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை வழங்கப்படும்.

கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெறுபவர்கள் நடைபயணம் செய்ய, ஜனவரி மாதம் பொங்கலுக்கு பின்னரே வழக்கமான திறப்பு விழாவிற்கு பிறகு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.