தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள் நகரில் உள்ள சிட்டி கிளப் ஒன்றில் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஒன்றாக கூடியதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகிறார்.

இந்த மாணவர்களே சாந்தோம் பள்ளியில் 10+2 முறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முதல் பேட்ச் மாணவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் மற்றும் பல நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்த மாணவர்கள் சென்னை வரும்போது சந்திப்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகின்றனர்.

இந்த குழுவில், சமீபத்தில் இந்திய பௌலிங்கிலிருந்து வெளிவந்த திறமையான பயிற்சியாளர் B.அருண் மற்றும் வயலின் வித்துவான் M. A . கிருஷ்ணசாமி ஆகியோர் பிரபலமான உறுப்பினர்கள்.

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது பள்ளி முதல்வர் மூலமாக உதவிகள் இவர்கள் செய்து வருவதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தொலைபேசி எண் : 94400 86214

 

Verified by ExactMetrics