கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழாவில் விருது பெற்ற மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்கள்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் பெரிய அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்து மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ்கள் மற்றும் ரொக்கத்துடன் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.

பாரதிய வித்யா பவனிலும் மற்ற சபாக்களை போல் இசை மற்றும் நடன கச்சேரிகள் இனி வரும் காலங்களில் நடைபெறும். விரைவில் நவராத்திரி விழாவுக்காக கச்சேரிகள் பாரதிய வித்யா பவனில் நடைபெறவுள்ளது.