சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் தமிழக முதல்வர் மரியாதை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்.ஏ புரத்திலுள்ள சிவாஜி கணேசனின் மணி ண்டபத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சருடன் திமுக தலைவர்கள் சிலரும் வந்திருந்தனர். இந்நிகழ்தமிழக முதல்வர் மரியாதைவில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் கலந்து கொண்டார். மேலும் சிவாஜி கணேசனின் மகன்களான பிரபு, ராம் குமார் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.

சாதாரண நேரங்களில் சிவாஜி கணேசனின் மண்டபத்திற்கு மக்கள் அவ்வளவாக வருவதில்லை. ஏனென்றால் இங்கு சிவாஜி கணேசனின் சில குறிப்பிட்ட படங்களே வைக்கப்பட்டுள்ளது. சிவாஜிகணேசனின் புகழை உயர்த்தும் வகையில் இந்த மண்டபத்தை மேம்படுத்தினால் மேலும் நிறைய மக்கள் இங்கு வந்து செல்வார்கள்.

இந்த மண்டபம் பழைய சத்யா ஸ்டூடியோ, எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியின் எதிரே அமைந்துள்ளது.