பாரதிய வித்யா பவனில் கலை, கணினி அடிப்படை வகுப்புகள் தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு அனைத்தும் இப்போது இந்த வளாகத்தில் நடத்தப்படுகின்றன.

பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான கணினி அடிப்படை இலவச வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

கர்நாடக இசை – வாய்ப்பாட்டு மற்றும் இசை கருவிகள், நடனம் மற்றும் யோகா ஆகியவற்றிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்த வகுப்பில் சேர்வதற்கு கிழக்கு மாட வீதியில் உள்ள பாரதிய வித்யா பவன் அலுவலகத்தை அணுகவும்.

Verified by ExactMetrics