கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். இன்றிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்தும் ஆழ்ந்த வழிபாடு செய்தும் பிறருக்கு உதவியும் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா இறுதியில் இயேசு இறந்த தினமாக இருக்கும். இந்த தினத்தன்று பூசை நேரத்தில் நாம் நம் வாழ்க்கையை நினைக்க வேண்டும் என்று கருதி பாதிரியார் பேராலயங்களுக்கு வருபவர் நெற்றியில் சாம்பலால் சிலுவை போடுவார். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் பாதிரியார் அந்த சாம்பலை அனைவருக்கும் கையில் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அபிராமபுரத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் எடுக்கப்பட்டது.