காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை

வித்யா மந்திர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான நன்கொடை செய்துள்ளார். அழகு நிலையத்தில் அவரது நீண்ட தலைமுடியை 12 அங்குலம் வெட்டி ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த Hair For Hope India தொண்டு நிறுவனம் கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்து உதவும் வகையில் செயல்படுகிறது. திவ்யஸ்ரீயின் அம்மா Hair For Hope India தொண்டு நிறுவன விவரங்களை கடந்த ஆண்டு ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டார் .

Verified by ExactMetrics