மாதவப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்கான வேலைகள் தீவிரம்

மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வெயிலில் இருந்து மக்களை காக்க கோவில் வளாகத்திற்குள் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. சாமி ஊர்வலத்தில் வரவிருக்கும் வாகனங்கள் அனைத்தும் ஊர்வலத்திற்குத் தயாராக உள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை ஊர்வலம் நடைபெறுகிறது.