மயிலாப்பூரில் ஏப்ரல் 24ம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

மயிலாப்பூர் டிஎஸ்வி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த மருத்துவ முகாமை மயிலாப்பூர் செங்குந்தர் மகாசபை மற்றும் ஆர்கே நகர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு கார்த்திகேயனை 9952966777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.