இராணி மேரி கல்லூரியில், மாணவர்களுக்கு தொழில்முனைவு குறித்த பயிலரங்கு

இராணி மேரி கல்லூரியின் உடற்கல்வி சுகாதார கல்வி மற்றும் விளையாட்டுத் துறை, அக்ஷயாஸ் அறக்கட்டளை மற்றும் வைலேர்ன் இணைந்து “மாணவர்களின் தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல்” என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தன.

ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகப் பயிற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.

எஸ்.மதுமதி ஐ.ஏ.எஸ். டான்சிட்கோ நிர்வாக இயக்குனர் துவக்க உரையாற்றினார்.

டாக்டர் பி. உமா மகேஸ்வரி இராணி மேரி கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை எச்.ஓ.டி டாக்டர் இ.உமா, அக்‌ஷய் அறக்கட்டளை நிறுவனர் சாந்தி பிரியா, வேலேர்ன் நிறுவனர் வைத்தீஸ்வரன், கேவிஏஎச் பேஷன் நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் அம்பிகா ஆகியோர் மாணவர்களிடையே பேசினர்.

அவர்கள் அனைவரும் இளம் பெண்கள் எப்படி ஒரு தொழிலைத் தொடங்கலாம் மற்றும் அதை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Verified by ExactMetrics