ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், புத்தாண்டு காலை, அலைமோதிய மக்கள் கூட்டம்.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு தரிசன நூறு ரூபாய் டிக்கெட் வரிசை வடக்கு பிரகாரம் வரை நீண்டிருந்தது.

50 மற்றும் 100 ரூபாய் டிக்கெட்டுகளின் வரிசைகளில் மக்கள் சனீஸ்வரர் சந்நிதி வரை காலை 10 மணிக்குள் குவிந்தனர். இலவச தரிசனத்திற்காக சில ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்றிருந்தனர்.

அனைத்து பக்தர்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், இன்று மதியம் 2 மணி வரை கோயில் திறந்திருக்கும் என ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு