மெரினா ரவுண்டானாவில் ஏராளமான மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

பொது இடங்களில் புத்தாண்டுக் கூட்டங்கள் நடத்துவதற்கு நகரக் காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கலாம். ஆனால், டிசம்பர் 31 இரவின் பிற்பகுதியில் மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே உள்ள, ஒளியூட்டப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட பி.ஓர் அன்ட் சன்ஸ் மணிக்கூண்டிற்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

கடிகாரம் பன்னிரெண்டு மணியை நெருங்கியபோது, கூட்டத்திலிருந்து ஆரவாரம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, கூட்டம் கலைந்து சென்றது, பின்னர் சாலையை கிளியர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

முன்னதாக, மெரினாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கடற்கரைக்குள் செல்ல முற்பட்டவர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். கடற்கரை ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. மெரினா லூப் சாலையில் கார்கள் மற்றும் பைக்குகள் அனுமதிக்கப்படவில்லை.

புகைப்படம: மதன் குமார்

Verified by ExactMetrics