கர்நாடக இசை மேதை டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணாவின் நினைவாக விருதுகள்: ஜூலை 6

டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா மெமோரியல் டிரஸ்ட் மற்றும் பாரதிய வித்யா பவன் ஆகியவை இணைந்து, மறைந்த கர்நாடக இசை மேதை டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணாவின் நினைவாக மூன்று கர்நாடக இசை வித்வான்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவுள்ளது.

வித்வான்கள் T.K.மூர்த்தி, M. சந்திரசேகரன் மற்றும் TH விக்கு விநாயக்ரம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி, கே. கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரால் ‘பாலமுரளி பஞ்சரத்தினம்’ இசையுடன் தொடங்கும்.

வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

Verified by ExactMetrics