ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மயிலாப்பூரில் அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் காலையிலேயே பக்தர்கள் தொடர்ச்சியாக கோவிலுக்கு வந்துகொண்டிருந்தனர். பிரகாரத்தை சுற்றி மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை, சுவாமி தரிசனம் செய்ய மக்களை வரிசையில் வருமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும் முண்டகக்கன்னி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இங்கு தெருவோரத்தில் நிறைய மக்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த மக்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்தனர்.

Verified by ExactMetrics