ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டுவரும் மாநகராட்சி கிளினிக்கில் தடுப்பூசி போடுவதற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் சுமார் இருநூறு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்வார்பேட்டை பள்ளியில் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் காலையிலேயே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுச்செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் கொடுக்க ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள்ளேயே அனைத்து டோக்கன்களும் விநியோகிக்கும் அளவுக்கு மக்கள் இங்கு வருகின்றனர். மாநகராட்சியின் பல்வேறு கிளினிக்குகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாந்தோம் அப்பு தெருவில் உள்ள கிளினிக்கிற்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசிகள் வரவில்லை என்றும் அதனால் இங்கு யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மக்கள் யாராவது தடுப்பூசி போடுவதற்கு வந்தால் ஆழ்வார்பேட்டை கிளினிக்கிற்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.

 

Verified by ExactMetrics