மயிலாப்பூர் பகுதியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

இன்று முஸ்லீம் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிமுறைகள் அமலில் உள்ள பொழுதிலும் காலை முதலே மக்கள் சிறப்பு தொழுகைக்கு அவரவர் வீட்டருகே உள்ள மசூதிக்கு சென்று வந்தனர். கச்சேரி சாலையிலுள்ள மசூதியில் காலையிலேயே மக்கள் தொழுகைக்கு சென்று வந்தனர். கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே போல சாந்தோம் பகுதியிலுள்ள டூமிங் குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிறிய மசூதியில் சுமார் நூறு நபர்கள் தொழுகையில் பங்கேற்றனர். தொழுகையில் பங்கேற்ற மக்கள் அனைவரும் தொழுகை முடிந்தவுடன் கூட்டம் சேராமல் அவரவர் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.

புகைப்படம் : சாந்தோம் பகுதி டூமிங்குப்பத்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகையின்போது எடுத்த புகைப்படம்