ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ் அளவு இங்கு வழங்கப்பட்டது. கோவிஷீல்ட் 300 டோஸ் அளவுகளும் இங்கே இருப்பில் உள்ளது.
காலை 8.45 மணி முதல் மக்கள் தடுப்பூசி போட வரிசையில் காத்திருந்ததனர்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள அரசு சுகாதார மையத்தில் இப்போது 100 டோஸ் கோவாக்சின் வழங்கப்பட்டுள்ளது; இங்கும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

பிற மாநகராட்சி நடத்தி வரும் கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. கோவிஷீல்ட் எல்லா இடங்களிலும் பெரிய அளவில் இருப்பு உள்ளது.