மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.

இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும். இந்த வருடம் இதுபோன்ற வகுப்புகள் நடைபெறுவதாக தெரியவில்லை. அதேபோல வருடா வருடம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள செயின்ட். பீட்ஸ் பள்ளியில் பெரிய கிரிக்கெட் பயிற்சி நடைபெறும். இதில் சுமார் முந்நூறு மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவார்கள். இந்த கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics