இந்த கடையில் ஆந்திர மாநில மாம்பழங்கள் விற்கப்படுகிறது

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் எஸ்.கே.ப்ரூட்ஸ் என்ற பழக்கடை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இங்கு விற்கப்படும் மாம்பழங்கள் ஆந்திர மாநிலம் தடா பகுதியிலிருக்கும் தோப்பிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. மல்கோவா மாம்பழம் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவிர செந்தூரம், பங்கனப்பள்ளி மாம்பழங்களும் விற்பனை செய்யப்படுகிறது. மல்கோவா மாம்பழம் இப்போது அதிக தேவை இருக்கிறது.

செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்