நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை காலை கலங்கரை விளக்கம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன் வாங்க வந்த மக்கள் சிலர் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. நாளை இந்த மீன் மார்க்கெட் முழுவதும் மூடப்படும். அதே போல ஏற்கெனவே மெரினா கடற்கரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics