பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற பகவான் சத்யசாய்பாபாவின் பிறந்தநாள் விழா.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மயிலாப்பூர் சமிதி சார்பில் நவம்பர் 22ம் தேதி பகவான் சத்ய சாய்பாபாவின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சத்ய சாய் உறுப்பினர்களின் கச்சேரிகளும், பஜனைகளும் நடைபெற்றது. பின்னர் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் நவம்பர் 22ம் தேதி மாலை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் பாபா கோவிலில் பிறந்த நாள் விழா நடந்தது. மேலும் இதற்கு ஒரு நாள் முன்னதாக டாக்டர் ரங்கா சாலையில் சத்யசாய்பாபாவின் உறுப்பினர்கள் உணவு தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

Verified by ExactMetrics