மயிலாப்பூரில் பருவமழையின் காரணமாக வெகுவாக உயர்ந்துள்ள நீர் மட்டம். ஒரு சில இடங்களில் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் மயிலாப்பூர் பகுதியிலும் இந்த பருவமழையின் முதல் சீசனில் நிறைய இடங்களில் நீர் ஊற்று அதிகமாகி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இது சம்பந்தமாக மயிலாப்பூர் டைம்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளோம். ஏற்கெனெவே டாக்டர். ரங்கா சாலை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலர், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்று அதிகமாகி ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்று அடையாறு காந்தி நகரில் மழை நீர் சேமிப்பு சம்பந்தமான மையத்தை நடத்தி வரும் டாக்டர் சேகர் ராகவனிடம் கேட்டபோது, அவர் தற்போதைக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாது என்றும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பருவமழை சீசன் முடிந்த பிறகு பூமியில் சுமார் 30 அடிக்கு ஒரு டியூப்வெல் அமைத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு இந்த நீரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார். இதற்கு செலவு சுமார் முப்பதாயிரம் வரை ஆகும் என்று தெரிவிக்கிறார்.

மேலும் தற்போது அமைத்துள்ள போர்வெல் நூறு நூற்றைம்பது அடிக்கு மேல் உள்ளதால் போர்வெல் வழியாக தற்போது ஊறியுள்ள தண்ணீரை தனியாக சேமிக்க முடியாது என்றும், இதற்கென தனியாக டியூப்வெல் அமைக்க வேண்டும் என்று சேகர் ராகவன் தெரிவிக்கிறார்.

மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் பீமன்னப்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளது.

 

File Photo: மழை நீர் சேமிப்பு
File Photo: மழை நீர் சேமிப்பு
Verified by ExactMetrics