மயிலாப்பூரில் இரண்டு சாலைகளின் பகுதிகள் இடிந்ததால், சீரமைக்கும் பணிகள் தீவிரம்.

செயின்ட் மேரிஸ் சாலையின் ஒரு பகுதியும் (சென்னை மாநகராட்சி கல்லறைக்கு அருகில் / எம்.ஆர்.டி.எஸ் மந்தைவெளி நிலைய முடிவில்) மற்றும் ஸ்ரீ முண்டகக்கன்னி அம்மன் கோயில் தெருவின் மற்றொரு பகுதியும் (இந்தப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது) மழை காரணமாக இடிந்து போனது.

சீரமைக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுவருகிறது. இந்த இரு பிரிவுகளிலும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.