மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் மகா பெரியவா சந்நிதி

மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறுகையில், மகா பெரியவா சந்நிதிக்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஒரு நல்ல இடம் கடந்த நான்கு மாதங்களாக தேடப்பட்டது, கடைசியாக பிச்சுப்பிள்ளை தெருவில், மாமி டிஃபெனுக்கு எதிரே உள்ள இரண்டு மாடி குடியிருப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த இடத்தின் அளவு ஒரு கிரவுண்ட். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கமாக பிச்சு பிள்ளை தெருவின் எண். 4 இல் அமைந்துள்ளது. கட்டிடம், மறுவடிவமைப்பு மற்றும் மாற்றம் உள்ளிட்ட செலவுகள் சுமார் ரூ. 10 கோடி. சொத்து உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டி இருப்பதால் ஒரு வருடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு முழு கட்டணத்தையும் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சந்நிதி இந்த வீட்டின் தரைத்தளத்தில் வரும் என்றார். ஒத்த கருத்தை கொண்ட பக்தர்களிடம் இருந்து முழுப் பணமும் வசூலிக்கப்பட்டதும், சந்நிதியின் மறுவடிவமைப்பு குறித்த மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களை அறக்கட்டளை இறுதி செய்யும்.

மயிலாப்பூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதாலும், மஹா பெரியவா இத்தலத்தில் அருளியிருப்பதாலும், நான்கு மாட வீதிகளுக்குள்ளேயே மத ஊர்வலங்களை நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கணேஷ் சர்மா கூறினார்.

இந்த அறக்கட்டளை மாதாந்திர அனுஷம் மற்றும் வருடாந்திர ஜெயந்தி ஹோமங்கள், பதுகா பூஜை, வேதபாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துகிறது. அனைத்தும் மஹா பெரியவாவின் பெயரில்.

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics