உத்தவ கீதை பற்றிய புத்தகம்: பிப்ரவரி 26ல் வெளியீடு

தெளிவான தமிழ் உரைநடையில் எழுதப்பட்ட உத்தவ கீதையின் புதிய புத்தகம் பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி ஐயர் அறக்கட்டளையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.

இந்த புத்தகத்தை கே.எஸ்.சந்திரசேகரன் மற்றும் டாக்டர் வி.மோகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

உத்தவ கீதையின் புதிய புத்தகத்தை டாக்டர் டி.பி.ராதாகிருஷ்ணன், (முதல்வர், சமஸ்கிருத கல்லூரி, மயிலாப்பூர்) வெளியிடுகிறார்.