ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கியது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவத்திற்கான முதற்கட்ட வேலைகள் இன்று செவ்வாய்கிழமை தொடங்கியது.

கோவிலின் உள்ளேயும், சந்நிதித் தெருவிலும் தற்காலிக மேற்கூரை அமைக்கத் தேவையான இயந்திரங்கள் வந்துள்ளது, வேலைக்கு பணியாட்களும் வந்துள்ளனர்.

முக்கிய உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டவுடன், பிற பணிகள் ஆரம்பிக்கப்படும் – சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு தேவையான அனைத்து வாகனங்கள் மற்றும் பாகங்கள் தயாரித்தல்.

பிரம்மோற்சவ விழா மார்ச் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

புகைப்படம்: கதிரவன்