தேர்தல் 2021: நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் தயார்.

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஐம்பது நபர்கள் நாளை வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விவாதித்தனர். மேலும் காலை பத்து மணியளவில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் வந்தனர். தேர்தலுக்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியுள்ளது. இந்த வாக்குசாவடி மயிலாப்பூரில் ஒரு பெரிய வாக்குச்சாவடியாகும். இந்த முறை கோவிட் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics