கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், பெண் தொழில்முனைவோரின் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மகளிர் பஜார் விற்பனையில் கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் தலைமை வகித்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் பல்வேறு பொருட்களை விற்க ஸ்டால்களை அமைத்துள்ளனர் – பேஷன் நகைகள், உடைகள் மற்றும் துணி, உலர்ந்த மற்றும் ஈரமான உணவு பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்றவை இந்த ஸ்டால்களில் விற்கப்படுகிறது.

இந்த மகளிர் பஜார் விற்பனை மார்ச் 8ம் தேதி மாலை 7 மணி வரை நடைபெறும்.

Verified by ExactMetrics