மந்தைவெளியில் தபால் நிலையம் இயங்கி வந்த கட்டிடத்தில் செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் இயங்கவுள்ளது.

ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்.

இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு பொது மருத்துவத்தில் எம்.டி., பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இங்கு மருத்துவம் பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சாதாரண நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை இங்கு வழங்கப்படும். பெரிய பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு செட்டிநாடு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இங்கு மருத்துவ வசதிகளை முழுமையாக நிறைவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த இடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ளது.

செய்தி மற்றும் புகைப்படம்; சி.ஆர்.பாலாஜி