மயிலாப்பூர் பகுதிகளில் சிறிய அளவிலும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள்

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன.

தொற்றுநோய் பரவி வரும் சூழலில் கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மயிலாப்பூரில் பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்ட இன்றைய குடியரசு தின நிகழ்வுகள் எளிமையாகவும் சிறியதாகவும் இருந்தது.

எப்போதும் போல, செயின்ட் இசபெல் மருத்துவமனை வளாகத்தில், செவிலியர் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சி வண்ணமயமாக இருந்தது – வளாகத் தளத்தில் இந்தியாவைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு பெரிய ரங்கோலி கோலம் வடிவமைத்திருந்தனர், மேலும் மூவர்ணக் கொடியின் கலரில் உடைகளை அணிந்திருந்தனர்.

பாரதிய வித்யா பவனில், கிழக்கு மாட தெருவில் பாடகர் மாஸ்டர் சுதா ராஜா தலைமையில், இங்கு ஏற்றப்பட்ட கொடியின் கீழ், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய சிறு குழுவினரின், பாடல் பாடும் நிகழ்ச்சி நடந்தது.

அருகாமையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவின் குழுவினர் கொடியேற்றும் நிகழ்வை சாதாரணமாக நடத்தினார்கள். லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து கொடிக்கம்பத்தைச் சுற்றி பூக்கள் மற்றும் கலர் பொடிகளால் பெரிய ரங்கோலியை வடிவமைத்திருந்தனர்.

மந்தைவெளிப்பாக்கம் குடியிருப்பாளர்களின் ஒரு சிறிய குழு கல்யாண் நகர் அஸோசியேஷன், இவர்கள் எப்போதும் போல் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினர், ஜெத் நகர், ஆர்.ஏ. புரத்தில், உள்ளூர் சமூகத் தலைவர்கள், அந்தப் பகுதியில் கழிவுகளை அகற்றும் உர்பேசர் சுமீத்தின் ஊழியர்களை தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவழைத்து அவர்களை கௌரவித்தனர்.

Verified by ExactMetrics