விடுமுறை காலத்தில் பூங்காவில் புதிய கைவினை பொருட்கள் செய்வதை கற்றுக்கொண்ட குழந்தைகள்

‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ தொடரின் ஒரு பகுதியாக, சுந்தரம் ஃபைனான்ஸ் சனிக்கிழமை மாலை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ‘ட்ரீம் கேட்சர்’ கைவினைப் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது.

இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 25 குழந்தைகள் கலந்து கொண்டனர். அனைத்து கலைப் பொருட்களையும் சுந்தரம் ஃபைனான்ஸ் வழங்கியது. பயிலரங்கின் முடிவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.