புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த தேவாலய குழுவினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலால், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இதன் காரணமாக ஏராளமான ஏழைகள் பாதிக்கப்பட்டனர்.

வின்சென்ட் டி பால் சொசைட்டியின் தலைவர் ப்ரீவின் வின்சென்ட் தலைமையிலான அவர் லேடி ஆப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைந்த வின்சென்ட் டி பால் சொசைட்டி உறுப்பினர்கள், கடந்த வாரம் இந்த குடும்பங்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று, அவர்களுக்கு 100 ரொட்டி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்.