ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த
பள்ளியின் தாளாளர்.

இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. இந்த வளாகத்தில் செயின்ட் லாசரஸ் மண்டபத்திற்கு சற்று மேலே 10 வகுப்பறைகள் உள்ளன.

புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு, புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு, தரை மற்றும் கூரையும் புதுப்பிக்கப்பட்டு, சிறந்த காற்றோட்டத்திற்காக புதிய ஜன்னல்கள் வைக்கப்பட்டு இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது என பள்ளியின் பாதிரியார் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளி, கடந்த வாரம் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் நிர்வாகி மற்றும் பாதிரியார் ஜேசுதாஸ் SDB அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பங்குத்தந்தை லூர்துஸ் மார்செல், உதவி பங்குத்தந்தை மற்றும் சகோதரர் சதீஷ் மற்றும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமையாசிரியை ஜூலி கூறுகையில், தற்போது இப்பள்ளியில் 208 மாணவர்கள் உள்ளதாகவும், 2022 – 2023 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எல்.கே.ஜி.யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

Verified by ExactMetrics