வார இறுதி நாட்களில் மூடப்பட்ட கோவில்கள்: நவராத்திரியின் ஆர்வத்தை குறைக்கிறது

நவராத்திரி நேரத்தில் தற்போது மக்கள் கொலுவை காண்பதற்கும் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

கொரோனா சூழ்நிலை காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மக்கள் கோவிலுக்குள் செல்ல அரசு தடைவிதித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கோலவிழி அம்மன் கோவிலுக்கு வந்த மக்கள் சிலர் அங்கு கோவில் வாயிலில் விளக்கேற்றி வழிபட்டனர்.