மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், கவர்னர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று காலை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

காலையில் இருந்து, சில மூத்த ஆண்களும் பெண்களும் இராட்டையில் நூல் நெய்தனர். பள்ளி மாணவிகள் மூத்த குழுவுடன் சேர்ந்து பஜனைப் பாடினர்.

மாநில கவர்னரும், முதலமைச்சரும் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.