ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பங்கேற்க நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

கோவிலில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்தனர் மற்றும் சிறிய இடமிருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றினர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

அந்தி சாயும் போது கூட்டம் அலைமோதியது.

ஏற்கனெவே, பிரதோஷம் உள்ளிட்ட கோயில் சடங்குகள் இங்கும் மற்ற கோயில்களிலும் நடத்தப்பட்டன, இருப்பினும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மற்றும் வேறு சில நாட்களில் கோவில் வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

செய்தி மற்றும் புகைப்படம் : S. பிரபு

 

Verified by ExactMetrics