124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஜனவரி 25ல் சிறப்பு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், ஜனவரி 26ல், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த, நான்கு ஏழை ஜோடிகளுக்கு, இலவசமாக திருமணம் நடந்தது. தேவாலயமே முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.

சபையின் வசதிக்காக ஜனவரி.29 ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆண்டுவிழா நடைபெற்றது என ஆயர்குழுவின் செயலாளர் ஒய்.புவனேஷ்குமார் தெரிவித்தார்.

ஆயர் அருட்தந்தை எர்னஸ்ட் செல்வதுரை தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. திருச்சபையின் முன்னாள் போதகர்கள் மற்றும் பாஸ்டர் அம்மாக்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சால்வைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருச்சபை பெரியவர்களுக்கு ஆண்டுவிழா பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்