ஆர்.ஏ.புரத்தில் பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாம். பிப்ரவரி 5 ல் நடைபெறுகிறது.

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாமை நடத்துகின்றன.

இம்முகாம் பிப்ரவரி.5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ.புரம் சென்னை மாநகராட்சி பூங்கா 7-வது மெயின் ரோட்டில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

மகளிர் சிறப்பு மருத்துவர்கள் குழு குளிர்சாதனவசதியுள்ள வேனில் இந்த முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முன் பதிவு கட்டாயம். பதிவு செய்ய கீழே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்: 9840390903/9884043225 / 9841030040

Portrait of a female Indian doctor standing in front of her colleague with a stethoscope around her neck
Verified by ExactMetrics