இந்த மூத்த காங்கிரஸ் தலைவர் தன்னுடைய பிரச்சாரத்தை மயிலாப்பூரில் தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில் அடையாரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் என்கிற வி.நாராயணன் சைலண்டாக தன்னுடைய பிரச்சாரத்தை சாதாரணமாக தொடங்கியுள்ளார்.

இவர் மயிலாப்பூரில் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்க தலைவராக இருப்பதால் அவருடைய சங்கத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா உறுப்பினர்களின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்தார். மேலும் இது பற்றி அவர்கூறும் போது இந்த தேர்தலில் கூட்டணியின் சார்பாக மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதால், தான் அந்த சீட்டை பெற விரும்புவதால் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Verified by ExactMetrics