ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தைப்பூச தெப்பத் திருவிழா தேதி அறிவிப்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக தெப்பம் விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் குளத்தில் தண்ணீர் குறைவாகவே உள்ளது, தெப்பம் விடுவதற்கு தண்ணீர் அதிகளவு வேண்டும்.  தண்ணீர் வெளியில் இருந்து கொண்டுவந்து குளத்தில் நிரப்புவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.